by Staff Writer 26-11-2018 | 3:51 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் நலின் பெரேரா, 7 பேர் கொண்ட முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமித்துள்ளார்.
பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான இந்த நீதியரசர்கள் குழாமில் உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிகாரே, சிசிற டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த மனுக்கள் தொடர்பில் மூன்றாம் தரப்பாக முன்னிலையான உதய கம்மன்பில உள்ளிட்ட ஐவர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, பிரதம நீதியரசர் முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமித்துள்ளார்.
மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.