ஸ்ரீ.சு. கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

by Staff Writer 25-11-2018 | 3:03 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (26) கூடவுள்ளது. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் மற்றும் வெற்றிடமாகியுள்ள தொகுதி அமைப்பாளர்கள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.