பொதுத்தேர்தலை நடாத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பொதுத்தேர்தலை நடாத்துமாறு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 25-11-2018 | 2:56 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புத்தளம் - ஆராச்சிகட்டு பகுதியில் இன்று (25) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆராச்சிகட்டு நகரில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். ஆராச்சிகட்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் தற்போதைய நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.