வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-11-2018 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புளொட் அமைப்பு செய்ததாகக கூறப்படுகின்ற கொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பான பழி பாவங்களில் இருந்து விடுபட்டு முழுமையான அரசியல் நன்மையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு தான் தமிழ்மக்கள் பேரவையைப் பயன்படுத்துவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். 02. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 03. வடக்கு, கிழக்கு தமிழ்மக்களுக்கு ஏனைய சிறுபான்மையோர் போலல்லாது தமது முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு உண்டு என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 04. மஹியங்கனை – மாபாகடவெவ பகுதியில் காட்டுயானை தாக்கியதில் 9 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளன​ர். 05. பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்தி 01. தென் கொரியா, நாட்டின் மிகப்பெரிய நாய்கள் கொல்களத்தை மூடவுள்ளது.