நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 24-11-2018 | 9:43 PM
Colombo (News 1st) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கே தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கும் பூரண மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க மற்றும் சீதாவக்க ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்குள் சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.