மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

by Staff Writer 23-11-2018 | 3:33 PM
Colombo (News 1st) மஹியங்கனை - மாபாகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 9 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளன​ர். காட்டு யானையொன்று வீட்டின் சுவரை உடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் நேற்றிரவு 11.50 அளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின் போது வீட்டிலிருந்து வௌியேறிய சிறுமிகளை யானை தாக்கியுள்ளது. 9 வயதான மொஹமட் இஸ்மைல் ரமீஸ் மற்றும் 11 வயதான அன்வர் உன்ம ராஸியா ஆகிய சிறுமிகளே யானைத் தாக்குதலில் உயிரழந்துள்ளனர். சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.