மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2018 | 3:33 pm

Colombo (News 1st) மஹியங்கனை – மாபாகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 9 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளன​ர்.

காட்டு யானையொன்று வீட்டின் சுவரை உடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் நேற்றிரவு 11.50 அளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது வீட்டிலிருந்து வௌியேறிய சிறுமிகளை யானை தாக்கியுள்ளது.

9 வயதான மொஹமட் இஸ்மைல் ரமீஸ் மற்றும் 11 வயதான அன்வர் உன்ம ராஸியா ஆகிய சிறுமிகளே யானைத் தாக்குதலில் உயிரழந்துள்ளனர்.

சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்