புளொட் அமைப்பினால் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

புளொட் அமைப்பினால் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2018 | 9:27 pm

Colombo (News 1st) புளொட் அமைப்பு செய்ததாக சொல்லப்படுகின்ற கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பான பழி பாவங்களில் இருந்து விடுபட்டு முழுமையான அரசியல் நன்மையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு தான் தமிழ்மக்கள் பேரவையைப் பயன்படுத்துவதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேரவையை அரசியல் தேவைகளுக்காகப் பாவிக்கிறார் என்பது முற்றிலும் பொய் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்திய இராணுவத்துடைய துணைக்குழுவாகவும் இலங்கை அரசாங்கத்தினுடைய துணைக்குழுவாகவும் இருந்து பெருமளவான தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு புளொட் அமைப்பு காரணமாக இருந்தது என்பது பகிரங்கமான குற்றச்சாட்டு எனவும் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

மர நடுகை மாதத்தை முன்னிட்டு வவுனியா – கனகராயன் குளத்தில் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்