பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2018 | 4:01 pm

Colombo (News 1st) இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 5000 ஐரோப்பிய மற்றும் கலப்பின கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கறவைப் பசுக்கள் நாடு முழுவதிலுமுள்ள கறவைப் பசு பண்ணைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும், பலவீனமான முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களினால் 10 முதல் 15 லிட்டர் அளவில் மிகவும் குறைந்த பால் பெறப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தப் பண்ணைகளை பயனுள்ள வகையில் செயற்திறன் மிக்கதாக மேம்படுத்த வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான மூலோபாயங்களை மதிப்பீடு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும்
குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் தேசிய பசு வள அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்