75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்

75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்

75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்

எழுத்தாளர் Bella Dalima

22 Nov, 2018 | 5:02 pm

ஹொலிவுட் நாயகர்களில் உலகப் புகழ் பெற்றவர் ராபர்ட் டி நிரோ. இவர் ”God Father, The Untouchables, Once Upon a Time in America, Angel Heart, Dirty Grandpa உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு கிரேஸ் ஹைடவர் என்பவரைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகக் காதலித்து மணந்தார் ராபர்ட் டி நிரோ.  அச்சமயத்தில் அவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருந்தது. டயானே அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தானது. அவர்களுக்கு ட்ரேனா (47) என்ற மகளும் ரபேல் (42) என்ற மகனும் உள்ளார்கள். டயானேவுடனான விவாகரத்திற்குப் பின், டூகி ஸ்மித் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார் ராபர்ட் டி நீரோ. இந்த ஜோடிக்கு 23 வயதான ஜூலியன் – ஆரோன் என்ற இரட்டையரான மகன்கள் உள்ளனர். மூன்றாவது மனைவியாகத்தான் கிரேஸை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு எல்லியட் என்ற மகனும் ஹெலன் கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.

தற்போது நிரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63. அண்மையில் இந்த ஜோடி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன. அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்ற செய்தியையும் ஹொலிவுட் ஊடகங்கள் வெளியிட்டன. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ராபர்ட் டி நிரோ கிரேஸை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். ஆனால், அப்போது சமாதானமாகி தொடர்ந்து வாழ முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்