மக்கள் சக்தி: பௌத்த துறவிகளின் ஆசிரமத்திற்கு குடிநீர் மற்றும் கழிவறைக் கட்டமைப்பு

மக்கள் சக்தி: பௌத்த துறவிகளின் ஆசிரமத்திற்கு குடிநீர் மற்றும் கழிவறைக் கட்டமைப்பு

மக்கள் சக்தி: பௌத்த துறவிகளின் ஆசிரமத்திற்கு குடிநீர் மற்றும் கழிவறைக் கட்டமைப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2018 | 8:16 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி 1000 வேலைத்திட்டத்தின் கீழ் இன்று மற்றுமொரு திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான – ரன்கிரி உல்பத்த கிராாமத்திலுள்ள பௌத்த துறவிகளின் ஆசிரமத்திற்கான கழிவறைக் கட்டமைப்பு இன்று கையளிக்கப்பட்டது.

இந்த ஆஸ்ரமத்தில் குடிநீர் மற்றும் கழிவறைக் கட்டமைப்பு இன்மையால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

நீண்ட தூரம் சென்றே குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.

இது தொடர்பில் மக்கள் சக்தி செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இன்று குடி நீர் மற்றும் கழிவறை கட்டமைப்பு கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு வைத்தியர் பிரகாஷ் பிரியதர்ஷன், நிலங்கா குணத்திலக்க மற்றும் டெக்லா குணத்திலக்க ஆகியோர் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்