சத்தியாக்கிரகம் தொடர்கிறது: 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கத் திட்டம்

சத்தியாக்கிரகம் தொடர்கிறது: 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2018 | 6:46 pm

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரி வருகிறது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு மாநகர சபை முன்றலில் நடைபெறும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அஜித் பி பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று பங்கேற்றிருந்தனர்.

சிவில் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொடர்புடைய தொழிற்சங்க ஒன்றியத்தினால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்குமாறு கோரி சபாநாயகரிடம் கையளிப்பதற்காக, 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் செயற்பாடும் இங்கு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தின் போது,

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை 7 ஆம் திகதி எதிர்பார்க்கின்றோம். நாம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வோம். ஒரு அடியேனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்

என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்