இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2018 | 9:47 pm

Colombo (News 1st) சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளனர்.

ஏ.ஏச்.எம். பௌஸியின் வீட்டில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என விடுத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தூதுவர்களுக்கு இதன்போது விளக்கியதாக அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்