வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் வரை இடைக்கால கணக்கறிக்கையைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் வரை இடைக்கால கணக்கறிக்கையைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 10:06 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவை இன்று மீண்டும் கூடியது.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை இடைக்கால கணக்கறிக்கையைத் தயாரிப்பதற்கு இதன்போது அமைச்சரவை அனுமதி கிடைத்தாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இராஜினாமா செய்ததாக அறிவித்த சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க கலந்துகொண்டதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்த வடிவேல் சுரேஸூம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற இடத்ததிற்கு வந்ததாக எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்