வசந்த சேனாநாயக்க அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்பு

வசந்த சேனாநாயக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பு

by Staff Writer 21-11-2018 | 4:07 PM
Colombo (News 1st) அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவித்த வசந்த சேனாநாயக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க நியூஸ்ஃபெர்ஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.