ஓசையில்லாமல் உதவும் விஜய்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓசையில்லாமல் உதவும் விஜய்

by Bella Dalima 21-11-2018 | 4:23 PM
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வருகிறார். நேற்று (20) காலை 5 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், ஆடைகள் போன்ற பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பியுள்ளார்.