ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர்- நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர்- நவீன் திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 8:20 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார்.

நான் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். நான் அறிந்த வகையில் கரு ஜயசூரியவை அவ்வாறு முடக்க முடியாது. பெரும்பான்மை இல்லாமையினாலேயே அவர்கள் தற்போது இவ்வாறு பேசுகின்றனர். நான் மகாநாயக்க தேரர்களை சந்திக்கச் சென்ற போது ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதாகக் கூறியிருந்தேன். அதன் மூலம் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்குவோம் என்பதைக் கூறியிருந்தேன்.

என நவீன் திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்