பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 1:22 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். மிளகாய்த் தூள் எனது முகத்திலும் வீசப்பட்டது. எனது கண்களை மூடுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் என்பதை தெரிவிக்கக் கூட என்னால் முடியவில்லை. இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். பாராளுமன்றம் மதிப்பிற்குரிய இடம். அதன் காரணமாகவே நான் முறைப்பாட்டைப் பதிவு செய்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் நம்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்