சந்திமாலுக்கு பதில் தனுஷ்க குணதிலக்க அணியில் இணைப்பு

சந்திமாலுக்கு பதில் தனுஷ்க குணதிலக்க அணியில் இணைப்பு

சந்திமாலுக்கு பதில் தனுஷ்க குணதிலக்க அணியில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 8:35 pm

Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான தனுஷ்க குணதிலக்க பெயரிடப்பட்டுள்ளார்.

உபாதைக்குள்ளான தினேஷ் சந்திமாலின் வெற்றிடத்திற்குப் பதிலாகவே அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

காலியில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் உபாதைக்குள்ளானார்.

இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், அவரது வெற்றிடத்திற்கு சரித் அசலங்க குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

உபாதை தொடர்ந்தும் குணமாகாத நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் சந்திமால் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக இன்று மாலை அறிவித்தது.

எனினும், அவருக்கு பதிலாக சகலதுறை வீரரான தனுஸ்க குணதிலக்க இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (23) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளதுடன், தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் TV1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்