கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 6:47 pm

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு

எதிர்வரும் சனிக்கிழமை (24) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொயிசாபுர குடியிருப்பு தொகுதிக்கு அண்மித்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு பகுதியில் இடம்பெறும் திருத்தப்பணிகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்