இளைஞர்கள் கடத்தல்: சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

இளைஞர்கள் கடத்தல்: சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

இளைஞர்கள் கடத்தல்: சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 1:43 pm

Colombo (News 1st) கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு – கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் அண்ணாச்சி என்ற பாதாளக் குழு உறுப்பினரின் பெயரில் இளைஞர்களின் உறவினர்களைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கப்பம் ​கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று மன்றில் அறிவித்தது.

இதற்கிணங்க, தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்