அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் கைது

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2018 | 3:57 pm

Colombo (News 1st) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் மிக மோசமானதென ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்புக் குறைபாடுகளே இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனவும் அக்கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.

டெல்லி தலைமைச் செயலகத்தினுள் முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு நேற்று (20) நுழைந்த அனில்குமார் என்ற இளைஞர், செயலகத்தில் இருந்து வெளியில் வந்த முதல்வர் கெஜ்ரிவாலின் மீது மிளகாய்ப்பொடியை வீசினார். விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்