ஹெலிகொப்டரில் பாராளுமன்றத்திற்கு வருவதை மஹிந்த ராஜபக்ஸ நிறுத்த வேண்டும்: அனுரகுமார

ஹெலிகொப்டரில் பாராளுமன்றத்திற்கு வருவதை மஹிந்த ராஜபக்ஸ நிறுத்த வேண்டும்: அனுரகுமார

ஹெலிகொப்டரில் பாராளுமன்றத்திற்கு வருவதை மஹிந்த ராஜபக்ஸ நிறுத்த வேண்டும்: அனுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2018 | 9:37 pm

Colombo (News 1st) அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் பிரதமரால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப பணத்தை செலவு செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் அல்லாத ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வௌியேற வேண்டும் எனவும் பிரதமராகப் பதவியேற்ற நாளில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதை மஹிந்த ராஜபக்ஸ நிறுத்த வேண்டும் என்றும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ரணில் விக்ரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஸவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை மாத்திரமே அவர்களால் பயன்படுத்த முடியும் என அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்