முஹம்மது நபியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

முஹம்மது நபியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

முஹம்மது நபியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2018 | 7:17 am

Colombo (News 1st) இறை தூதராம் முஹம்மது நபி அவர்களின் ஜனன தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபி அவர்களின் தத்துவம், எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன, குலம், நிறம் போன்ற எந்தவொரு விடயத்திலும் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர் என்பதே அவரது போதனையாக அமைந்தது எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது முழு வாழ்வையும் அடிமை சமூகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த நபி அவர்கள், சுரண்டலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்