பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும்கட்சி உறுப்பினர்கள் நியமனம் இன்று

by Staff Writer 20-11-2018 | 9:20 AM
Colombo (News 1st) பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான ஆளும்கட்சி உறுப்பினர்களை இன்று (20) நியமிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதிபதி, பிரதமருடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பானது ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.