by Staff Writer 20-11-2018 | 6:52 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக, பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வியடம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்படுவதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்ளை்ளார்.
பாராளுமன்ற பொறியியாளர் உள்ளடங்களாக குழுவொன்று இந்த விபரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி கண்டறிவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.