திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-11-2018 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக குண்டு துளைக்காத வாகனங்கள் 2 கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வெளியாகும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. 02. நாடு முன்னொருபோதும் இல்லாதவாறு அரசியல் ரீதியில் பிளவுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட கூறியுள்ளார். 03. காலி – போப்பே, போத்தல பிரதேச சபையில் நேற்று (19) அமைதியின்மை ஏற்பட்டது. 04. சர்வகட்சி கூட்டத்தின் பின்னர், நேற்று (19) பாராளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்டமைக்காக அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். 05. பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 06. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நேற்று (19) உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். வௌிநாட்டுச் செய்தி 01. தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி எலன் காஸியா (Alan García), உருகுவே நாட்டுத் தூதரகத்திடம் தஞ்சம் கோரியுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் நேற்று (19), மன்னார் – பெரியமடு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

ஏனைய செய்திகள்