கிரிந்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப் படகுகள் மோதி விபத்து

கிரிந்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப் படகுகள் மோதி விபத்து

கிரிந்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப் படகுகள் மோதி விபத்து

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2018 | 3:44 pm

Colombo (News 1st) கிரிந்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப் படகொன்று மற்றுமொரு படகுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்திற்குள்ளான படகில் இருந்த 05 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.

இன்று அதிகாலை 1.30 அளவில் விபத்து இடம்பெற்றதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேர குறிப்பிட்டார்.

காயமடைந்த மீனவர்கள் அருகிலிருந்த மருத்துவப் படகினூடாக காப்பற்றப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட படகையும் மீனவர்களையும் கரைக்கு அழைத்துவர கடற்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேர சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்