அரச பணத்தை பயன்படுத்தும் அதிகாரம் இல்லை என பிரேரணை

பிரதமரின் செயலாளருக்கு அரச பணத்தை பயன்படுத்தும் அதிகாரம் இல்லை என பிரேரணை

by Staff Writer 19-11-2018 | 10:14 PM
Colombo (News 1st) பிரதமரின் செயலாளருக்கு அரச பணத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரம் இல்லை என தெரிவிக்கும் பிரேரணையொன்று சபாநாயகரிடம் இன்று (19) பிற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. நவீன் திசாநாயக்க, ரவி கருணாநாயக்க, நாலக்க கொலொன்னகே, காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோரது கையொப்பங்களுடன் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்தப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதேநேரம், கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் அத்தகைய அறுவெறுக்கத்தக்க சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருக்கும் வகையில் செயற்படவேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் வலியுறுத்தியதாக சபாநயகரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒழுக்கமீறல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்