போப்பே, போத்தல பிரதேச சபையில் அமைதியின்மை

போப்பே, போத்தல பிரதேச சபையில் அமைதியின்மை

போப்பே, போத்தல பிரதேச சபையில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2018 | 8:08 pm

Colombo (News 1st) காலி – போப்பே, போத்தல பிரதேச சபையில் இன்று (19) அமைதியின்மை ஏற்பட்டது.

போப்பே, போத்தல பிரதேச சபையின் அதிகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் காணப்படுகின்றது.

எனினும், பிரதேசசபை தலைவரின் ஆசனத்தில் ஐக்கிய தேசிக் கட்சியின் பிரேமலால் அபேசிங்க அமர்ந்தார்.

அத்துடன், அவரின் தரப்பினர் கறுப்பு ஆடையணிந்து இன்று சபைக்கு வந்திருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும் இதனால் சபையின் பெரும்பான்மை தமக்கு இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிட்டனர்.

இதன்போது, அங்கு வந்த பிரதேசசபையின் உப தலைவர் எஸ். அபேகோன் உள்ளிட்ட குழுவினர் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரை சபையிலிருந்து வௌியே தூக்கிச்சென்றனர்.

அதன்பின்னர் சபை நடவடிக்கைகளை ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பதற்கு தலைவர் தீர்மானித்தார்.

அதனையடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சபைக்குள்ளே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அதன்பின்னர், சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானபோதிலும் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்