பிரதமருக்காக குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவு: மறுக்கும் பிரதமர் அலுவலகம்

பிரதமருக்காக குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவு: மறுக்கும் பிரதமர் அலுவலகம்

பிரதமருக்காக குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவு: மறுக்கும் பிரதமர் அலுவலகம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2018 | 8:34 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக குண்டு துளைக்காத வாகனங்கள் 2 கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வெளியாகும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற குறித்த பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக எந்தவொரு வாகனத்தையும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெறவில்லை என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்