குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல்

குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல்

by Chandrasekaram Chandravadani 19-11-2018 | 1:15 PM
Colombo (News 1st) குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக, வட மேல் மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் என் ஹரீட் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், 187 பேர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், எலிக்காய்ச்சலினால் விவசாயிகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல், கண் சிவத்தல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.