மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்

மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்

by Staff Writer 18-11-2018 | 5:23 PM
Colombo (News 1st) ஏற்றுமதி மற்றும் தேசிய வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு, மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை - மத்தள பகுதியில் 125 ஏக்கர் நிலப்பரப்பில் மாம்பழச் செய்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வர்த்தக செய்கையாக மாம்பழச் செய்கையை 87 விவசாயிகள் முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.