டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு

by Staff Writer 18-11-2018 | 1:26 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் மற்றும் 16 திகதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டதன் ஊடாக, நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.