சர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்ளாமைக்கான மக்கள் விடுதலை முன்னணியின் விளக்கம்

by Staff Writer 18-11-2018 | 8:26 PM
Colombo (News 1st) அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தௌிவுபடுத்தியுள்ளார்.
தற்போது எழுந்துள்ள நிலை தொடர்பில் ஜனாதிபதி இன்று மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாக எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி என்ற வகையில் நாம் அந்த கலந்துரையாடலில் பங்கேற்காது இருக்க தீர்மானித்துள்ளோம். இந்த ஸ்திரமற்ற நிலை ஏற்படுவதற்கு முக்கியமாக 5 விடயங்கள் காரணமாக அமைந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத உறுப்பினர் ஒருவரை சதி மூலம் பிரதமராக நியமித்தமை பல்வேறு சுற்றுக்களாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமித்து இந்த நெருக்கடிக்கு ஜனாதிபதி வித்திட்டார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்குவதற்காக உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவமதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அந்த செயற்பாடு தோல்விகண்டதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய செயற்படத் தவறியமை. இந்த நம்பிக்கயைில்லாப் பிரேரணையை எமது தரப்பே முன்வைத்தது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட நாள் முதல் நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் பின்பற்றவேண்டிய நடைமுறை சரிவர பின்பற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் கேள்வியை வினவ வேண்டும் என்பதுடன் ஆதரவு எதிர்ப்பு என்ற குரலுக்கமைய வாக்கெடுப்பை நடாத்தி சபாநாயகர் முடிவை அறிவிக்க முடியும். குரலை அடிப்படையாக வைத்து எவ்வாறு செய்ய முடியும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 47, ஒன்று சரத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. குரலை அடிப்டையாகக் கொண்டு முடிவை அறிவிக்க முடியும். இது முதற் சந்தர்ப்பமல்ல. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றதும் மேலதிக நேரத்திற்காக குரலை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ வாக்கெடுப்பை நடத்தினார். அதன்பின்னர் தகவலறியும் சட்டத்தை கரு ஜயசூரிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் குரலுக்கமைய வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததுடன், அதனை எதிர்த்தவர்கள் வெற்றி பெற்றதாக சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஸ அறிவித்தார் என அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.