அனுமதிப்பத்திரமின்றி பறவைகளைக் கொணர்ந்தவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி பறவைகளைக் கொணர்ந்தவர் கைது

by Staff Writer 18-11-2018 | 5:19 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி 27 பறவைகளை நாட்டுக்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 கிளிகள் மற்றும் லவ்பேர்ட்ஸ் வகையிலான 10 பறவைகள் சந்தேசகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கப்பிரிவின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவங்கொடதெரிவித்துள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட பறவைகள் 6 இலட்சம் ரூபா பெறுமதியுடையவையாகும். கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பறவைகளை மீண்டும் சிங்கப்பூருக்கு கொண்டுசெல்ல ஏற்றுமதி அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி நாட்டுக்கு விலங்குகளைக் கொண்டுவர முடியாது என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.