வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-11-2018 | 6:46 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 02. ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு முழுமையான நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 03. பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 04. பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு கூரிய ஆயுதத்தைக் கொண்டுசென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 05. நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல் போன்றவை நாளுக்கு நாள் சீர்குலைவதன் காரணமாக, நாட்டின் இருப்பு வெகுவிரைவில் வீழ்ச்சியடையும் என்பது தௌிவான உண்மை என மகாநாயக்கர், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 06. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை. ஆகவே, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால், இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். 02. தமிழகத்தில் பல மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் தாக்கத்தினால், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.