மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியானார் இப்ராஹிம்

மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி பதவியேற்பு

by Bella Dalima 17-11-2018 | 6:55 PM
Colombo (News 1st) மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி (Ibrahim Mohamed Solih) இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். 7 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் மாலைத்தீவு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாலைத்தீவு சென்றிருந்தார். மாலைத்தீவில் கடந்த 7 வருடங்களாக நிலவிய அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமாகும். மாலைத்தீவில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய இப்ராஹிம் மொஹம்மட் சொலி , தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம், மாலைத்தீவில் அப்துல்லா யாமீனின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.