பலாத்காரமாக அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது

பலாத்காரமாக அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது - பிரதமர்

by Staff Writer 17-11-2018 | 7:33 AM
Colombo (News 1st) பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால், எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (16), வீரகெட்டிய - கசாகல, புராண விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று (நேற்று 16ஆம் திகதி) பாராளுமன்றம் நாடகமேடை போன்று காணப்பட்டது. நாங்கள் அரசாங்கத்தைக் கொண்டுசெல்வோம். விட்டுச்செல்ல மாட்டோம். அதை நான் தௌிவாகக் கூறுகிறேன். சட்டத்திற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றினால், விட்டுச்செல்ல நாங்கள் தயார். ஆனால், பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல. ஜனாதிபதிக்கு மாத்திரமே என்னை அவ்வாறு செயற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அரசியலமைப்பிற்கு அமைய அந்த அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு கூட பறிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்