இலங்கை 75 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது

இங்கிலாந்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை 75 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது

by Staff Writer 17-11-2018 | 8:38 PM
Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை வெல்வதற்கு கைவசம் 3 விக்கெட்கள் உள்ள நிலையில், மேலும் 75 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. வெற்றி இலக்கான 301 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய நான்காம் நாள் முடிவுக்கு வந்தது. கண்டி பல்லேகலயில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களையும் இலங்கை அணி 336 ஓட்டங்களையும் பெற்றன. 9 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதன்படி, இலங்கை அணியின் வெற்றி இலக்கு 301 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணி 27 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்களையும் இழந்தது. எனினும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும் பெற்று நம்பிக்கை அளித்தனர். இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சீரற்ற காலநிலையால் ஆட்டம் தடைப்பட்டு நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.