ராகம, ஜா எல இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது

ராகம, ஜா எல இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது

ராகம, ஜா எல இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2018 | 9:14 am

Colombo (News 1st) புத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து, நாளை (18) இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் இரு மருங்கலும் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் ஜா எல மற்றும் புத்தளத்திற்கு இடையிலான ரயில் போக்குவரத்து மாத்திரமே இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்