பாராளுமன்றம் கலைப்பு: நகர்த்தல் பத்திரம் தாக்கல்

பாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்

by Staff Writer 16-11-2018 | 7:25 PM
Colombo (News 1st) ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு முழுமையான நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட ஐவர் இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனு மீதான விசாரணை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த விடயம் என்பதை கவனத்திற்கொண்டு ஐவரைக் கொண்ட பூரண நீதியரசர்கள் குழாமினை நியமிக்குமாறு கோரி இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அமைச்சர் உதய கம்பன்பில, பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஜகத் வெல்லவத்த மற்றும் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஆகியோரால் இந்த நகர்த்தல் பத்திரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.