கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்: ஹர்ஷ டி சில்வா

by Bella Dalima 16-11-2018 | 5:02 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 48/2 உறுப்புரிமைக்கமையவே இது இடம்பெற்றது. இதனை வேறு எவரும் பார்க்க வேண்டியதில்லை. முழு உலகமும் இதனைக் கண்டது. நீண்டகாலம் செல்வதற்கு முன்னர், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை வர்த்தமானியில் அறிவித்தால் சிறந்தது என நான் எண்ணுகின்றேன்
என குறிப்பிட்டார். மேலும், கட்சித் தலைவர்கள் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.