ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

by Staff Writer 15-11-2018 | 11:59 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில், சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதிக்கு பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்த பிரேரணை தொடர்பில் தாம் முன்நிற்பது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மையினரின் கருத்திற்கு செவிமடுப்பதே அன்றி பக்கச்சார்பாக செயற்படுவது அல்ல என சபாநாயகரின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மனசாட்சிக்கு அமைய தாம் செயற்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த 122 உறுப்பினர்களும் சபையில் இருந்தமையை நினைவுபடுத்தியுள்ள சபாநாயகர், அவர்களுக்குள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காலம் தாமதிக்காது பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினரின் கருத்தை செவிமடுத்து, பாரிய அழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக செயற்படுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்துப் பிரஜைகள் மற்றும் எதிர்கால சந்ததியினர் சார்பாக கௌரவத்துடன் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.