ரொஷேன் சில்வாவின் அரைச்சதத்தின் மூலம் இலங்கை 46 ஓட்டங்களால் முன்னிலை

ரொஷேன் சில்வாவின் அரைச்சதத்தின் மூலம் இலங்கை 46 ஓட்டங்களால் முன்னிலை

ரொஷேன் சில்வாவின் அரைச்சதத்தின் மூலம் இலங்கை 46 ஓட்டங்களால் முன்னிலை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2018 | 7:54 pm

Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரொஷேன் சில்வாவின் அரைச்சதத்தின் மூலம் இலங்கை 46 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களுடன் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை 336 ஓட்டங்களைப் பெற்றது.

ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவேளை, ரொஷேன் சில்வா மற்றும் அகில தனஞ்சய ஜோடி 85 ஆவது ஓவரின் முதல் பந்தில் முதல் ஓட்டத்தைப் பூர்த்தி செய்யாமல் இரண்டாவது ஓட்டத்தை அடைந்ததால், அவர்களின் செயற்பாட்டுக்கான தண்டனையாக இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்