பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2018 | 3:54 pm

Colombo (News 1st)  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 140 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 167 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசலின் விலை ஒரு லிட்டர் 111 ரூபாவாகவும் ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்