பயிற்சி பெறாமல் ஆயுர்வேத வைத்தியர்களாக பணிபுரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பயிற்சி பெறாமல் ஆயுர்வேத வைத்தியர்களாக பணிபுரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பயிற்சி பெறாமல் ஆயுர்வேத வைத்தியர்களாக பணிபுரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2018 | 7:43 am

Colombo (News 1st) ஆயுர்வேத ​வைத்தியசபையில் பயிற்சி பெறாமல் ஆயுர்வேத வைத்தியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பயிற்சிபெறாமல் சிகிச்சை வழங்கும் வைத்தியர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆயுர்வேத வைத்தியசபையின் பணிப்பாளர் நாயகம் கே.டி.ஜி.எஸ். குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைத் தவறான வழியில் வழிநடத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவர்கள் தொடர்பில் 011 5672905 மற்றும் 011 5672906 உள்ளிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யமுடியும் எனவும் ஆயுர்வேத வைத்தியசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்