பாராளுமன்றத்தில் அமளிதுமளி: சபாநாயகர் வௌியேற்றம்

பாராளுமன்றத்தில் அமளிதுமளி: சபாநாயகர் வௌியேற்றம்

பாராளுமன்றத்தில் அமளிதுமளி: சபாநாயகர் வௌியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2018 | 7:03 am

Colombo (News 1st)

UPDATE:

* பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட உரையை நம்பமுடியாதெனத் தெரிவித்து, பா.உ. லக்ஸ்மன் கிரியெல்ல கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை மேற்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து, சபாநாயகர் சபையிலிருந்து வௌியேறினார்.

*சபை அமர்வில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

*நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை.

* பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தற்போது விசேட உரையாற்றி வருகின்றார்.

* சபாநாயகர் தலைமையில் காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (15) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளது.

அதேநேரம் பாராளுமன்றத்தில் இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்