அமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

அமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு

by Staff Writer 15-11-2018 | 1:55 PM
Colombo (News 1st) நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு நேற்றிரவு முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதற்கமைய, *மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு *நிதி மற்றும் பொருளாதார அமைச்சு *சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு *திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு *பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு *மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு *கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு *நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு *அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.