பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸ, திருக்குமரன் நடேசனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 14-11-2018 | 5:05 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பிறிதொரு வழக்கிற்காக ஆஜராக வேண்டியுள்ளதால், இந்த வழக்கிற்கு வேறொரு தினத்தை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே ஆகியோர் மன்றில் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கைகளைப் பரிசீலித்த கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கம்பஹா - மல்வானையில் காணியொன்றை கொள்வனவு செய்து சொகுசு வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்